youtube வீடியோவை Facebook ல் இணைப்பது எப்படி?

இணையத்தளம் அல்லது வலைப்பதிவில் youtube வீடியோவை இணைக்க:
1. முதலில் நீங்கள் இணைக்க விரும்பும் வீடியோவை youtube ல் பதிவேற்றம் செய்யுங்கள்.
2. பின்பு பதிவேற்றம் செய்த வீடியோவை திறக்கவும்.
3. வீடியோ கீழ் அமைந்துள்ளது பங்கு(Share) பொத்தானை சொடுக்கவும்.
4. Embed பொத்தானை சொடுக்கவும்.
5. விரிவாக்கப்பட்ட பெட்டியில் வழங்கப்பட்ட குறியீட்டை நகலெடுக்கவும்.
6. உங்கள் வலைப்பதிவு அல்லது வலைத்தளத்தில் குறியீட்டை ஒட்டவும்.
Facebook ல் youtube வீடியோவை இணைக்க:
1. முதலில் நீங்கள் இணைக்க விரும்பும் வீடியோ வை youtube ல் பதிவேற்றம் செய்யுங்கள்.
2. பின்பு பதிவேற்றம் செய்த வீடியோவை திறக்கவும்.
3. வீடியோ கீழ் அமைந்துள்ளது பங்கு(Share) பொத்தானை சொடுக்கவும்.
4. பேஸ்புக் “F” Icon சொடுக்கவும்.
5. நீங்கள் ஏற்கனவே Face book ல் login ஆகவில்லை என்றால், கேட்கப்படும் போது உங்கள் பேஸ்புக் கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி Facebook உள்நுழையவும்.
6. Face book ல் நுழைந்த பின் Share பக்கத்தில் இருக்கும் கீழ் மெனுவை பயன்படுத்தி வீடியோ பகிர்ந்து கொள்ள விரும்பும் அம்சங்களை தேர்ந்தெடுக்கவும்.
7. வீடியோ பதிவுடன் சொல்ல விரும்பும் செய்தியை Enter செய்யவும்.
8. கடைசியாக “Share link” என்னும் பொத்தானை சொடுக்கவும்.
அவ்வளவுதான் நீங்கள் இணைக்க விரும்பிய வீடியோ உங்க facebook ல் வந்தாச்சு.