ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி?

நீங்கள் ஜிமெயில்ளில் இருந்து உங்கள் அலுவலகத்துக்கு மெயில் அனுப்புகிறீர்கள்,அப்பொழுது தகவல் மட்டும் அதனுடன் தொடர்புடைய ஆவணத்தையும் அனுப்ப வேண்டும். அதற்கு பதிலாக நீங்கள் தகவலை மட்டும் அனுபிவிடுகிறீர்கள். இந்த மாதிரியான நேரத்தில் தவறுதலாக அனுப்பிய மெயில் ஐ பெறுவதற்கு என்றே ஜிமெயில் ஒரு சேவையை வழங்குகிறது.
அதை பயன்படுத்த கீழே குறிபிட்டுள்ளதை செய்யவும்:
1. உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் பெட்டியில் வலது பக்கத்தில் “Mail settings” கிளிக் செய்யவும்.
2. பிறகு “settings” ல் “Labs” என்றுள்ளதை கிளிக் செய்யவும்.
3.”Available labs” கீழ் கொடுக்கப்பட்டுள்ள “Undo Sent” பக்கத்தில் உள்ள “enable” பொத்தானை கிளிக் செய்யவும்.
4. கடைசியாக நீங்கள் செய்ய வேண்டியது, Your message has been sent என்னும் வாக்கியத்துக்கு பக்கத்தில் உள்ள “Undo” லிங்க்கை கிளிக் செய்யவும்.
அவ்வளவுதான் நீங்கள் அனுப்பிய மெயில் திருப்பி எடுத்தாச்சு…