ஒரே browser இல் வெவ்வேறு Gmail முகவரியை உபயோகிப்பது எப்படி?

நாம் வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்த இரண்டு வேறு ஜிமெயில் முகவரிகள் உபயோகிப்பதுண்டு.ஒரே சமயத்தில் இரண்டு Gmail account டையும் பயன்படுத்த வேண்டும் என்றால் ஒரு முகவரினுள் நுழைந்து.மீண்டும் இரண்டாவது கணக்குனுள் நுழைய இரண்டாவது உலாவியை(Browser) பயன்படுத்துகின்றோம்.அதனால் இரண்டு கணக்குகளையும் ஒரே சமயத்தில் access செய்வதென்பது சற்று சிரமமாக உள்ளது. இந்த பிரச்சன்னைக்கு தீர்வு கொடுக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது தான் Multiple Sign-In option.
இதை செயல்படுத்த கீழே குறிபிட்டுள்ளதை பின்பற்றவும்.
நீங்கள் உங்கள் முதல் கணக்கினுள் நுழைந்த பிறகு, ஜிமெயில் மேல் வலது கை மூலையில் உள்ள “Account settings” ஐ கிளிக் செய்யவும்.
“Account Overview” என்னும் பக்கம் திறக்கும்.
அதில் “security” என்னும் தலைப்பின் கீழ் “Multiple Sign-In” option இருக்கும்.அதன் பக்கத்தில் இருக்கும் Edit ஐ கிளிக் செய்து, “On – Use multiple Google Accounts in the same web browser” என்னும் option மற்றும் அதன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள செக் பாக்ஸ் ஐ யும் தேர்ந்தெடுக்கவும்.
பின்பு “Save” பட்டனை கிளிக் செய்யவும்.

ஜிமெயில் மேல் வலது கை மூலையில் உள்ள “Switch Account” ஐ கிளிக் செய்தால், தற்போதைய முகவரிக்கு கீழ் “Sign into another account”என்றிருக்கும் லிங்க் மூலம் இரண்டு கூடுதல் முகவரியுனுள் நுழைய முடியும். பின்னர் எளிதாக முன்னும் பின்னுமாக கூட பல ஜிமெயில் தாவல்களை திறக்க முடியும்.